×

இன்று மாலை ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ: காத்திருக்கும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சான் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட் நேற்று வெளியானது.

நேற்று அனிருத் இடம்பெறும் வகையில் ஒரு புதிய ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில், படத்தின் ‘ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது.

அத்துடன் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ படத்தில் பாடலை வெளியிடும் முன் ஒரு ஜாலியான ப்ரோமோவை வெளியிடுவர். அதேபோல் ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்காகவும் வெளியிட்டுள்ளனர்.

இதில் இன்று மாலை 6 மணிக்கு ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ‘ஜெயிலர்’ பட அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள் அனைவரும் குதூகலமாகியுள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

The post இன்று மாலை ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ: காத்திருக்கும் ரசிகர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajinikanth ,San Pictures ,Nelson ,Anirudh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு