×

செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:செங்கல்பட்டு மேற்கு, ஈரோடு மாநகர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற காரணத்தாலும்,செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், (13-வது வார்டு அதிமுக செயலாளர், தாம்பரம் மாநகராட்சி), ஜான் எட்வர்ட் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர்), விஜயகுமார் (மறைமலைநகர் – மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர்), தயாளன் (8-வது வார்டு, தாம்பரம் மாநகராட்சி), ஈரோடு மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (13வது வட்ட அதிமுக மேலமைப்பு பிரதிநிதி), கேபிள் அருள்முருகன் (57வது வட்ட அவைத்தலைவர்), பழனியம்மாள் சந்திரன் (54வது வட்டம்), ஜொகராமுத்து நாகரத்தினம் (புதிய 43வது வட்டம்), செந்தில்குமாரி (புதிய 55வது வட்டம்) புஷ்பலதா (50வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி), சௌமியா தேவி (புதிய 23வது வட்டம்), திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் (முசிறி நகர 12வது வார்டு மேலமைப்பு பிரதிநிதி) ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு:செங்கல்பட்டு மேற்கு, ஈரோடு மாநகர் மாவட்டங்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேர்தல் பணியாற்றுகின்ற காரணங்களால், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நாகூர் கனி, (தாம்பரம் – மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச்செயலாளர்), சரளா (மறைமலைநகர் நகர அதிமுக  இணைச்செயலாளர்), சரவணன் (மறைமலைநகர் நகர வர்த்தக அணி செயலாளர்), பிரகாஷ்குமார் (கடப்பேரி, தாம்பரம்), ஈரோடு மாநகர் மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் (13வது வட்ட செயலாளர்), நாகரத்தினம், (54வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி) ஆகியோர், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்….

The post செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chengalpattu, Trichy, Erode ,OPS ,EPS ,Chennai ,Chengalpattu, ,Trichy, ,Erode ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...