×

திராவிட முன்னேற்ற கழகத்துக்கு உருவாக்கத்தான் தெரியும், அதிமுகவுக்கு அழிக்கத்தான் தெரியும்: மு.க.ஸ்டாலின் காணொலியில் பரப்புரை

திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பரப்புரை செய்து வருகிறார். திருவள்ளூர் பழமையான மாவட்டமாக இருந்தாலும் நவீன மாவட்டமாக மாற்றியது திமுக அரசு தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆங்கிலேயர்கள் வந்து இறங்கியது திருவள்ளூர் மாவட்டம் தான்​ என குறிப்பிட்டார்.  திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சுற்றி வந்தாலே திமுகவின் சாதனைகள் தெரியும் என கூறினார். கார் தொழிற்சாலை முதல் கண்ணாடி ஆலை வரை திமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என சுட்டிக்காட்டினார்.  திராவிட முன்னேற்ற கழகத்துக்கு உருவாக்கத்தான் தெரியும், அதிமுகவுக்கு அழிக்கத்தான் தெரியும் என பேசினார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறியது, அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது என கூறினார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறியது. தமிழ்நாட்டின் நம்பிக்கை நாயகனாக திமுக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதியளித்தார். மக்களோடு மக்களாக நாள்தோறும் இணைந்து பணியாற்றி வருகிறேன் என தெரிவித்தார். தரமான சாலைகள் போடப்படுகிறதா என நேரில் சென்று ஆய்வு செய்தேன் என கூறினார். நாம் இன்று செய்யும் சாதனைகள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கப் போகிறது என கூறினார். தமிழ்நாட்டின் நிதியிலையை தலைநிமிர்த்தியது திமுக தான் என பேசினார். தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக மாற்றியது அதிமுகதான் என குற்றம் சாட்டினார். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சி தான் திமுக ஆட்சி என கூறினார். மக்கள் நலன் காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு அமைப்புகளில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றார்கள். போலி நகைகளை வைத்து மோசடி செய்தவர்களுக்கு எப்படி கடன் தள்ளுபடி செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். எந்த திட்டமாக இருந்தாலும் அதில் பயனாளிகள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என கூறினார். எனவே மக்கள் நலன் காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது என்று முதல்வர் பேசினார். எனவே திமுக வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலும், கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரது சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என உரையை முடித்துக் கொண்டார். …

The post திராவிட முன்னேற்ற கழகத்துக்கு உருவாக்கத்தான் தெரியும், அதிமுகவுக்கு அழிக்கத்தான் தெரியும்: மு.க.ஸ்டாலின் காணொலியில் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Corporation for the Advancement of the Dhraviva ,G.K. ,Stalin ,Dishaga ,Thiruvallur ,Dravid Progress Corporation ,B.C. ,G.K. Stalin ,
× RELATED 20,332 பள்ளிகளில் இணைய வசதி கல்வித்துறை...