×

ஜனவரி 12ல் வருகிறது பான்-வேர்ல்டு படம் ‘ஹனு-மான்’

ஐதராபாத்: ஜனவரி 12ம் தேதி சங்கராந்தியன்று பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் கூட்ட ணியில் உருவாகி யுள்ள ‘ஹனு-மான்’ என்ற படம் திரைக்கு வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த போஸ்டரில் இதன் ஹீரோ தேஜா சஜ்ஜா, தனது கையில் ஹனுமன் கொடியுடன் ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு குதிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், ஜப்பானீஸ் ஆகிய 10 மொழி களில் ‘ஹனு-மான்’ படம் பான்-வேர்ல்ட்
படமாக வெளியாகிறது.

‘ஹனு-மான்’ படக் கதை, அஞ்சனாத்திரி என்ற கற்பனை இடத் தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹனுமனின் சக்திகளைப் பெற்ற ஹீரோ, அஞ்சனாத்திரிக்காக எப்படிப் போராடுகிறார் என்பது கதை. தேஜா சஜ்ஜா, அமிர்தா அய்யர், விநய் ராய், வரலட்சுமி, கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுரஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சவுரப் இசை அமைத்துள்ளனர். கே.நிரஞ்சன் ரெட்டி தயாரிக்க, மதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணைந்து தயாரித்துள்ளார்.

The post ஜனவரி 12ல் வருகிறது பான்-வேர்ல்டு படம் ‘ஹனு-மான்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Prashant Verma ,Teja Sajja ,Prime Show Entertainment ,Sankranti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்