×

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு நாய்களுக்கு பாஜக திருமணம் சேவல்-வாத்துக்கு விஎச்பி கல்யாணம்: ஆபர் தந்த கடைகளில் இந்து முன்னணி முற்றுகை

சென்னை: உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காதலர் தினம் கொண்டாட பாஜ, விஎச்பி, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, தென்சிறுவளூர் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயில் வளாகத்தில், வானூர் ஒன்றிய பாஜக சார்பில் காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாய் ஜோடிக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்தனர். அவற்றுக்கு மலர் கொத்து வழங்கப்பட்டது. முன்னதாக நாய்களுக்கு பூச்சரத்தால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு அவற்றில் ஒரு நாய்க்கு தாலி கட்டப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி பஸ் நிலையத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நகர தலைவர் ரவிக்குமார் தலைமையில் சேவல் மற்றும் வாத்துக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கொடிவேரி அணை பிரிவில் இந்து முன்னணி அமைப்பினர் நாய்க்கும், ஆட்டிற்கும் திருமணம் செய்து வைக்க போவதாக அறிவித்து இருந்தனர். காவல்துறையினர் எச்சரித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.புதுச்சேரியில் காதலர் தினத்தையொட்டி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு ஸ்டோரில் ஐஸ்கிரீம் ஆபர் போடப்பட்டிருந்தது. அங்கு முற்றுகையில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் காதலர் தின அடையாள சின்னங்களை பிரித்து வீசி கோஷமிட்டனர். புதிய பஸ்நிலையம் எதிரே செல்போன் நிறுவனத்தில் ஆபர் போடப்பட்டிருந்ததால் அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை உடைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். மிஷன் வீதியில் உள்ள ஓட்டலுக்குள் புகுந்த இந்து முன்னணியினர் பலூன் உள்ளிட்டவற்றை உடைத்து ஆபர் எதுவும் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். நகர பகுதியிலுள்ள ஒரு மசாஜ் சென்டரில் ஆபர் போடப்பட்டிருந்த நிலையில் அங்கு முற்றுகையிட்டனர்….

The post காதலர் தினத்துக்கு எதிர்ப்பு நாய்களுக்கு பாஜக திருமணம் சேவல்-வாத்துக்கு விஎச்பி கல்யாணம்: ஆபர் தந்த கடைகளில் இந்து முன்னணி முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Anti-Valentine's Day ,BJP ,VHP ,Aabar ,Chennai ,Valentine's Day ,Hindu ,Tamil Nadu ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...