சென்னை: பெரம்பூரில் அமமுக வேட்பாளர்களின் போஸ்டர்கள் மீது அதிமுக வேட்பாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருவதால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, அமமுக போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பெரம்பூர் 70 வது வார்டில் அதிமுக சார்பில் கௌசல்யாவும், அமமுக சார்பில் தேவி ஸ்ரீதரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அமமுக வேட்பாளரின் வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர்களை நேற்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 71 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்த கட்சியினர் ஒட்டியுள்ளனர். அவர்கள் போஸ்டர் ஒட்டி சென்ற பிறகு நேற்று முன்தினம் இரவு அந்த போஸ்டர்கள் மேலே அதிமுக வேட்பாளரின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் அமமுகவினர் போஸ்டர்களை ஒட்டினார்களோ அதற்கு மேலே அதே அளவில் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டி அமமுகவினரின் போஸ்டர்களை கிழித்து இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமமுகவினர் நேற்று காலை அதிமுக போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து எறிந்தனர். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது….
The post அதிமுக, அமமுக வேட்பாளர்களின் போஸ்டர்கள் கிழிப்பு: போலீசில் ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார் appeared first on Dinakaran.
