×

மாரி செல்வராஜூக்கு கார் பரிசளித்த உதயநிதி

சென்னை: ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய படம், ‘மாமன்னன்’. இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் நடித்து இருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து இருந்தது. கடந்த 29ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், மாரி செல்வராஜூக்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் கார் ஒன்றைப் பரிசளித்து இருக்கிறார்.

அப்போது இணை தயாரிப்பாளர் களான எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, நிர்வாகி சி.ராஜா உடனிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் தன் வீட்டுக்கு நேரில் வந்து பரிசளித்த காரை தனது குடும்பத்தினருடன் இணைந்து பெற்றுக்கொண்ட மாரி செல்வராஜ், உணர்ச்சிப்பெருக்குடன் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி சொன்னார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ என்ற படம் ஓடிடி தளத்துக்காக உருவாகி வருகிறது.

The post மாரி செல்வராஜூக்கு கார் பரிசளித்த உதயநிதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Udayanidhi ,Mari Selvarajuku ,Chennai ,Mari Selvaraj ,udyanidhi stalin ,vativelu ,keerthi suresh ,bahat basil ,PA R.R. Rahman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...