×

17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா!

சமீப காலமாக நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் சற்று டல்லாக காணப்பட்டது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. த்ரிஷா தற்போது விஜய் ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

‘தி ரோட்’ என்ற படத்தில் சோலோ ஹீரோயினாகவும், ‘ராம்’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திலும் த்ரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தெலுங்கில் உச்ச நடிகரான சிரஞ்சீக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புரோ டாடி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது.

இதில் சிரஞ்சீவி மனைவியாக த்ரிஷா நடிக்க உள்ளார். 2006ம் ஆண்டு சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். அதன்பிறகு சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது தந்தை, மகன் உறவை பற்றிய படமாக தயாராகிறது. இதில் சிரஞ்சீவி மனைவியாக திரிஷா நடிக்கிறார். இந்த படம் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தயாரிப்பில் உருவாக உள்ளது.

The post 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trisha ,Chiranjeevi ,Ponni ,Selvan ,Vijay ,Solo ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திரிஷா, குஷ்புவிடம் நஷ்ஈடு கேட்ட...