×

லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் நடிக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி?’

 

சென்னை: குணச்சித்திர நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன், இதற்கு முன்பு திரைக்கு வந்த ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கி முடித்து இருக்கும் புதிய படம், ‘ஆர் யூ ஓகே பேபி?’. இதில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், முருகா அசோக், பாவல் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி வைத்தியநாதன், லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து லஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதமாக படம் உருவாகியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தயாரிப்புப் பணிகள் பல்வேறு சவால்களுக்கு இடையே நடந்தது. இது மிக கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய ஒரு கதை என்பதால், அனைத்து சவால்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடி படமாக்கி முடித்தோம். இளையராஜா இசை எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகும். அவரது இசை படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. இந்தப் படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது. இது ஒரு கலவையான ஜானரில் உருவாகி இருக்கிறது’ என்றார்.

The post லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் நடிக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி?’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samudrakani ,Mishkin ,Lashmy Ramakrishnan ,Chennai ,Kollywood News ,Kollywood ,
× RELATED டான் இயக்குனர் திருமணம்