×

அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதிமுக, பாமக, அமமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் புரசை கோ.செல்வம், மாவட்ட மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார், துறைமுகம் தொகுதி, 54வது வட்ட மேலவை பிரதிநிதி மதுரை எம்.சரவணன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பி.ராஜ்குமார் ஜெயின், துறைமுகம் பகுதி முன்னாள் இணைச் செயலாளர் பி.யுவராஜ் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அதேபோன்று, அமமுகவைச் சேர்ந்த மத்திய சென்னை மத்திய மாவட்ட தலைவர் டி.எஸ்.சேகரன், மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.உதயசூரியன், தேமுதிகவை சேர்ந்த மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ரமேஷ், பாமகவைச் சேர்ந்த துறைமுகம் பகுதி துணைச் செயலாளர் மா.கணேசன், கிழக்கு பகுதி தலைவர் ஏ. செல்வராஜ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். மேலும் தமாகாவை சேர்ந்த எழும்பூர் தொகுதி, 108வது வட்டதலைவர் ஆர்.எம்.மனோஜ்குமார், பகுதி பொருளாளர் ஆர்.தினேஷ்குமார், பகுதி செயலாளர் வி.சிலம்பரசன், பகுதி துணைப் பொருளாளர் எல்.சதீஷ்குமார், மாணவர் அணி துணை தலைவர் எஸ்.ஹரிகிருஷ்ணன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் டி.நரேஷ்குமார், தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் எம்.ஜெயபிரகாஷ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை கிழககு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்….

The post அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Inkanakhaka ,Pamaka ,Chief Minister ,Bamaka ,G.K. ,Stalin ,Chennai ,Uttarakhagam ,Demudika ,Amamadhaka ,CM. G.K. ,Intrakshagam ,B.C. G.K. ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த...