×

அணைகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் கோடையில் பிரச்னை இல்லை

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க பயன்படும் அனைத்து அணைகளிலும் தண்ணீரின் அளவு போதுமான அளவு உள்ளதால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை நவம்பர் மாதம் வரை நீடித்தது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு பெய்தது. இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க பயன்படும் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக, முக்கிய நீர் ஆதாரங்களான பார்சன்ஸ்வேலி, டைகர் ஹில் மற்றும் மார்லிமந்து அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. தற்போது மழை பெய்யவில்லை என்ற போதிலும் ஊட்டி நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் தண்ணீர் வழங்க பயன்படும் அனைத்து அணைகளிலுமே போதுமான தண்ணீர் உள்ளது. இதனால், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய பயன்படும் அனைத்து அணைகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இதனால், கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. வழக்கம் போல், கோடையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும், என்றனர். …

The post அணைகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் கோடையில் பிரச்னை இல்லை appeared first on Dinakaran.

Tags : Feedi ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...