×

கொரோனா பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை புறநகர் ரெயில் சேவை 100 சதவீதம் இயங்க வில்லை. அதேபோல் ரெயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே விதித்து இருந்தது.  கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரெயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அண்மையில் தெற்கு ரெயில்வே தளர்த்தியது.  இந்த நிலையில், நாளை முதல் மின்சார ரெயில்கள் 100 சதவீதம் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே  தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்ட அட்டவணையின் படி 100 சதவீதம் ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post கொரோனா பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Corona ,Chennai ,Southern Railway ,Corona pandemic ,Tamil Nadu ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...