×

லேடி ஸ்பையாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன்

தெலுங்கு திரையுலகின் முன்னணி எடிட்டரும், இயக்குநருமான கேரி பி.ஹெச். இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் மற்றும் சரண் பகாலா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வருகிற 29ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் நடித்திருப்பது குறித்து ஐஸ்வர்யா மேனன் கூறும்போது, ‘தமிழில் நான் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் ‘லவ் பெயிலியர்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. தற்போது 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நான் லேடி ஸ்பையாக நடித்திருக்கிறேன். முதன் முறையாக சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன்’ என்றார்.

The post லேடி ஸ்பையாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aiswarya Manon ,Lady Spa ,Gary B. H. ,Nikil Siddhartha ,Arian Rajesh ,Aishwarya Manon ,Sanya Thakur ,Abinav Komadam ,Makarant Desh Pandey ,Jishu Senkupta ,Nitin ,Aiswarya Menon ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED க்யூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன்… வைரலாகும் புகைப்படங்கள்