×

அண்ணா பல்கலை முறைகேடு தொடர்பாக விசாரித்த நீதிபதி குழு விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள்  துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான  குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற  நீதிபதி கலையரசன் தலைமையில் குழு நியமித்து முந்தைய அதிமுக அரசு  உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல்  செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல்  நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில்  உத்தரவிட்டிருந்தது. அப்போது, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கை மூடி  முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும்,  பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை  எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும்   அதற்காக ஆணைய அறிக்கை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் கடந்த முறை  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை  வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதற்கு தங்கள் தரப்பில்  அளிக்கும் விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் எனவும் சூரப்பா தரப்பில்  கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை  சூரப்பாவுக்கு வழங்கலாமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அட்வகேட்  ஜெனரலுக்கு நீதிபதி அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயற்கை நீதிப்படி சம்பந்தப்பட்டவர் தரப்பு கருத்தை கேட்காமல் தண்டிக்கக்கூடாது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க சூரப்பாவுக்கு அவகாசம் வழங்க வேண்டும். எனவே, 2  வாரங்களில் அதன் நகலை சூரப்பாவுக்கு அரசு வழங்க வேண்டும். நகல் கிடைத்த 4 வாரங்களில் சூரப்பா தனது விளக்கத்தை அரசுக்கு அளிக்க வேண்டும். சூரப்பாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு முடிவுசெய்தால் அவரது ஆட்சேபங்களை பெற்ற பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உத்தரவிட்டார்….

The post அண்ணா பல்கலை முறைகேடு தொடர்பாக விசாரித்த நீதிபதி குழு விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Surapa ,Chennai High Court ,Chennai ,Surappa ,Judiciary Committee ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...