×

ரஜினிகாந்த் ஜோடியாக நிரோஷா

திரைக்கு வந்த ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களையும், ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கும் படம், ‘லால் சலாம்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இதில், மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவரது தங்கையாக ஜீவிதா ராஜசேகர், மனைவியாக நிரோஷா நடிக்கின்றனர். கடந்த 1990ல் வெளியான ‘அதிசய பிறவி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நிரோஷா நடிப்பதாக இருந்தது.

அப்போது நிரோஷாவுக்கு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக கனகா நடித்தார். தற்போது 33 ஆண்டுகளுக்குப் பிறகு நிரோஷா ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார். கமல்ஹாசன் ஜோடியாக ‘சூரசம்ஹாரம்’ படத்தில் அவர் நடித்திருந்தார். ‘லால் சலாம்’ படத்தில் டபுள் ஹீரோக்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பல வருடங்களாக திரையுலகில் நீடித்து வரும் ஜீவிதா ராஜசேகர், நிரோஷா இருவரும் இப்போதுதான் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரஜினிகாந்த் ஜோடியாக நிரோஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nirosha ,Rajinikanth ,Aishwarya Rajinikanth ,Lyca Productions ,Moideen Bhai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என்...