×

ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிக்கும் கமல்ஹாசன்

சென்னை: கோவையை சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசாக வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார் அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது மிகுந்த வேதனை அடைந்தேன். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிக்கும் கமல்ஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Sharmila ,Chennai ,Coimbatore ,Tamil Nadu State Transport Corporation ,Vasantakumari ,Veeralakshmi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 🔥🔥 Kamal Haasan Speech at Indian 2 Trailer Launch | Shankar | Anirudh | Dinakaran news.