×

நியாய விலைக்கடை, சேமிப்பு கிடங்குகளில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: நியாய விலைக் கடைகள், சேமிப்பு கிடங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கியவுடன் அவர்களுடைய கைபேசிகளுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. ஆனால், வாங்கப்படாத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக செய்திகள் வருகின்றன.இப்படி ஓரிரு பொருட்களை வாங்கிச் செல்பவர்களின் கைபேசிகளுக்கும் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொண்டதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதன் மூலம் அந்த பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உணவுத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் அனுப்பப்படுவதில்லை, ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் இரண்டு கிலோ எடை குறைவாக இருக்கிறது.இதை சரிகட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எடை குறைத்து பொருட்கள் வழங்கப்படுவதாகவும், இதற்கு காரணம் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள்தான் என்று தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. அதே சமயத்தில், இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி தெரிவிக்கையில், கிடங்குகளில் இருந்து சரியான அளவில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள்தான் தங்களின் தவறை மறைக்க கிடங்குகளின் மீது பழிபோடுவதாக கூறுகிறார். இவற்றை தடுத்து நிறுத்தினாலே அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் பொருட்கள் கிடைக்க வழிவகை ஏற்படும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளிலும், நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டினை உடனடியாக தடுத்து நிறுத்தி, சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

The post நியாய விலைக்கடை, சேமிப்பு கிடங்குகளில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pannerselvam ,Chennai ,OC ,Bannerselvam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...