×

‘ரஜினிகாந்த்170’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடக்கம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. அவர் நடித்த காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் லால் சலாம் படத்தில் நேற்றோடு தனக்கான காட்சிகளிலும் நடித்து முடித்துள்ளார் ரஜினி.

அந்த வகையில் ஜெயிலர், லால் சலாம் என்ற இரண்டு படங்களையும் முடித்து விட்ட ரஜினி, அடுத்தபடியாக ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தில் நடித்து முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்கிறார் ரஜினி.

The post ‘ரஜினிகாந்த்170’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajinikanth ,Nelson ,Lal Salam ,Aishwarya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என்...