×

அதிகரிக்கும் கொரோனா பரவல்!: திரிபுராவில் பிப்.11 முதல் 21ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு..புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு..!!

திரிபுரா: திரிபுராவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திரிபுராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. திரிபுரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வரும் 20ம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காவில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும் 50 சதவீதம் திறன் கொண்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்….

The post அதிகரிக்கும் கொரோனா பரவல்!: திரிபுராவில் பிப்.11 முதல் 21ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு..புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tripura ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...