×

மகளிர் கிரிக்கெட் தொடர் டி20 போட்டியில் இன்று இந்தியா – நியூசி. மோதல்

குயின்ஸ்டவுன்: இந்தியா – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் டி20 போட்டி, ஜான் டேவிஸ் ஓவல் அரங்கில் இன்று காலை 5.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.ஐசிசி மகளிர் ஒருநாள்  உலக கோப்பை  போட்டித் தொடர்  மார்ச் 4ம் தேதி முதல் ஏப்.3ம் தேதி வரை  நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கு தயார்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்திய மகளிர் அணி ஜனவரி கடைசி வாரத்தில் நியூசிலாந்து சென்றது. அங்கு ஒரே ஒரு டி20 போட்டியிலும், 5 ஒருநாள் போட்டியிலும் விளையாட உள்ளது. டி20 ஆட்டம் குயின்ஸ்டவுன் நகரில் இன்று நடக்கிறது.  ஒருநாள் போட்டிகள் பிப்.12, 15, 18, 22, 24 தேதிகளில் இதே மைதானத்தில் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிக்கான அணி மிதாலி ராஜ் தலைமையிலும்,  டி20 அணி ஹர்மன்பிரீத் தலைமையிலும் களமிறங்குகின்றன.இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), சிம்ரன் பகதூர், டானியா பாட்டியா, ஏக்தா பிஷ்ட், ராஜேஷ்வரி கெயிக்வாட், ரிச்சா கோஷ், சபினேனி மேகனா, மேக்னா சிங், பூனம் யாதவ், ஸ்நேஹ் ராணா, ரேணுகா சிங், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராகர்.நியூசிலாந்து: சோபி டிவைன் (கேப்டன்), ஏமி சாட்டர்த்வெய்ட் (துணை கேப்டன்), சூஸி பேட்ஸ், லாரென் டவுன், மேடி கிரீன், புரூக் ஹாலிடே, ஹேலி ஜென்சன், பிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், அமேலியா கெர், பிரான்சஸ் மெக்கே, ரோஸ்மேரி மேர், கேத்தி மார்டின், ஹன்னா ரோவ், லீ டாஹுஹு….

The post மகளிர் கிரிக்கெட் தொடர் டி20 போட்டியில் இன்று இந்தியா – நியூசி. மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,T20 cricket ,Queenstown ,T20 ,New Zealand ,John Davis Oval ,Dinakaran ,
× RELATED பாஜ, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சாதி,...