×

சேப்பாக்கத்தில் குவாலிபயர் 2 போட்டி: சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் இன்று மோதல்.! இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்?

சென்னை: 17வது சீசன் ஐபிஎல் தொடர் கிளைமாக்சை நெருங்கி உள்ளது. குவாலிபயர் 1 போட்டியில் வெற்றிபெற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் குவாலிபயர் 2 போட்டி இன்று நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. குவாலிபயர் 1ல் தோல்வியை சந்தித்த சன்ரைசர்ஸ் இன்று வெற்றி பெற்று பைனலுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (533), அபிஷேக் சர்மா (470), கிளாசென் (413 ரன்) முதுகெலும்பாக உள்ளனர். கடந்த போட்டியில் ராகுல் திரிபாதி அரைசதம் அடித்து கவனம் ஈர்த்தார். நிதிஷ் ரெட்டியும் தனது பங்கிற்கு அதிரடியாக ஆடுகிறார்.

பவுலிங்கில் பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார் ரன்களை வாரி வழங்கினாலும் நடராஜன் கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது, அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் இன்று விஜயகாந்த்திற்கு பதிலாக மார்க்ரம் அல்லது கிளென் பிலிப்ஸ் மற்றும் மார்க்கண்டே களம் இறங்குவர் என தெரிகிறது. மறுபுறம் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், தொடரில் முதல்பாதியில் வெற்றிகளை குவித்தாலும் பின்னர் தொடர் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் எமிலினேட்டர் போட்டியில் ஆர்சிபியை வென்றது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பேட்டிங்கில் ரியான் பராக், ஹெட்மயர், ஜெய்ஷ்வால், துருவ் ஜூரல், பாவல் என அதிரடி காம்போ உள்ளது.

பந்துவீச்சில் போல்ட், அஷ்வின் மற்றும் சாஹல் எதிரணிக்கு கடும் நெருக்கடி தருவர். ஆவேஷ் கானும் நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறார். இரு அணிகளும் 3வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற போராடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்று வெற்றிபெறும் அணி பைனலில் வரும் 26ம் தேதி கேகேஆருடன் பலப்பரீட்சை நடத்தும். இதற்கு முன் இரு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் 10, ராஜஸ்தான் 9ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் கடந்த 2ம் தேதி மோதிய போட்டியில் சன்ரைசரஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிளே-ஆப்பில் ஒருமுறை (2013ம் ஆண்டு எலிமினேட்டர்) மோதியதில், ராஜஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

The post சேப்பாக்கத்தில் குவாலிபயர் 2 போட்டி: சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் இன்று மோதல்.! இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்? appeared first on Dinakaran.

Tags : Qualifier ,Chepauk ,Sunrisers ,Rajasthan ,CHENNAI ,IPL ,Kolkata Knight Riders ,Chepakkam stadium ,Chepakkam ,Dinakaran ,
× RELATED இந்திய கால்பந்து அணியின் கேப்டன்...