×

ஒசூரில் ஆழ்துளை கிணற்றில் குரோமியம் கலந்த குடிநீர்: மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்ககோரி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை..!!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறும் குரோமியம் கலந்த குடிநீரால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர். ஓசூர் ரிங் ரோடு பகுதியில் உள்ள கிருஷ்ணா கார்டன் என்ற குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் கடந்த சில நாட்களாக குரோமியம் கலந்த தண்ணீர் வருவதாகவும் அதனை பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்களில் ஒருவர், 8 வருடங்களாக ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், கடந்த 2 மாதங்களில் இருந்து ஆழ்துளை கிணற்று நீரின் நிறம் மாற்றம் அடைந்தது. அந்த நிறம் மாறிய நீரை ஓசூரில் உள்ள ஒரு பரிசோதனை நிலையத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பிய போது அதில் குரோமியம் தன்மை அதிகமாக உள்ளது; இந்த நீரை பயன்படுத்தினால் உடல் உபாதைகள், தோல் வியாதிகள், குடல் நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார். எனவே, தங்கள் குடியிருப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post ஒசூரில் ஆழ்துளை கிணற்றில் குரோமியம் கலந்த குடிநீர்: மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்ககோரி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை..!!! appeared first on Dinakaran.

Tags : Borewells ,Osur ,Krishnagiri ,borewell ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது