×

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்: போக்சோ சட்டத்தில் கைது

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியராக காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன்(55) என்பவரும் உதவி ஆசிரியராக சுமதி என்பவரும் உள்ளனர்.இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காளியப்பன், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையறிந்த அவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த போளூர் டிஎஸ்பி குணசேகரன், கலசப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், போளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா, வட்டார கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலசப்பாக்கம் வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர் காளியப்பனிடம், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் விசாரணை நடத்தினார். நேற்று மாலை வரை விசாரணை நீடித்த நிலையில், தலைமையாசிரியர் காளியப்பன் மீது குற்றம் நிரூபனமானதால், அவரை சஸ்பெண்ட் செய்து போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் உத்தரவிட்டார்.இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், கலசப்பாக்கம் போலீசார் , போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து தலைமையாசிரியர் காளியப்பனை  கைது ெசய்தனர். தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக வேறு பள்ளியில் இருந்து ஆசிரியரை நியமித்து இன்று முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர். அதன்படி இன்று பள்ளி செயல்பட்டது….

The post மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்: போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Headmaster ,Kalasabakkam ,Silmisham ,Galasabakam ,Tiruvandamalai District ,Kalasapakam ,
× RELATED மாணவர்களுக்கு பாராட்டு விழா