×

போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் உக்ரைன் நாட்டு பெண்கள்… ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கும் அதிபர் ஜோபிடன்!!

வாஷிங்டன் : ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டு பெண்கள் போர் பயிற்சி பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க தலைமையிலான நாட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை குவித்துள்ளது ரஷியா. இதனிடையே தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டு பெண்கள் போருக்கு தயாராக ஆயுத பயிற்சி பெற்று வருகின்றனர்.ராணுவ வீரர்களிடம் நவீன துப்பாக்கிச் சுடும் பயிற்சிகளில் சாதாரண பெண்கள் ஈடுபடும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் நாட்டையும் வீட்டையும் காப்பது எங்கள் கடமை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனிடையே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களை அமெரிக்க அதிபர் ஜோபிடன்,உக்ரனைக்கு செல்வது மிகப்பெரிய தவறு என்பதை ரஷிய அதிபர் புதின் உணர்வார் என்று குறிப்பிட்டார். மேலும் உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தினால் அது ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும், அதற்கு ரஷியா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார். இதுவரை விதிக்கப்பட்ட தடைகளை விட மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதிப்போம் என்றார் அவர்.இதனிடையே ரஷியா மற்றும் உக்ரைன் படைகள் எல்லைப் பகுதிகளில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. எனினும் உக்ரைன் பிரச்சனை அமைதியா முறையில் தீர்க்கப்படும் என்று நம்புவதாக ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்….

The post போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் உக்ரைன் நாட்டு பெண்கள்… ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கும் அதிபர் ஜோபிடன்!! appeared first on Dinakaran.

Tags : Ukraine ,President Jobitan ,Russia ,Washington ,President ,Jobitan ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி