×

சீனாவில் ஒருவார புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு!: பணியிடங்களுக்கு திரும்பும் மக்கள்… ரயில், விமான நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..!!

பெய்ஜிங்: சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றிருப்பதை அடுத்து சொந்த ஊர்களில் இருந்து பணி செய்யும் இடங்களுக்கு மக்கள் திரும்புவதால் விமான மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சீனர்கள் சந்திர நாட்கையின்படி புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். இதையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி பிறந்த புலி புத்தாண்டை சீனா முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி ஒரு வாரம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தத்தமது சொந்த ஊர்களுக்கு சென்ற சீனர்கள் புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு வாரம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவுற்றதை அடுத்து சொந்த ஊர்களில் இருந்து பணி செய்யும் இடங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் திருப்பி வருகிறார்கள். இதனால் விமான நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. நாடு முழுவதுமாக சுமார் 25 கோடி மக்கள் விமானம், ரயில் மற்றும் பேருந்து மூலமாக பயணித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

The post சீனாவில் ஒருவார புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு!: பணியிடங்களுக்கு திரும்பும் மக்கள்… ரயில், விமான நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : One-week New Year ,China ,Beijing ,Lunar New Year ,
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு