- காந்திய தலைமைத்துவ கருத்தரங்கு
- மதுரை
- உடற்கல்வித் திணைக்களம்
- மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
- காந்திய
- ரமேஷ்
- தேவதாஸ்
- காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம்
- காந்தி அருங்காட்சியகம்...
- தின மலர்
மதுரை, ஆக. 4: தலைமை பண்பின் மகத்துவம் – காந்திய அணுகுமுறை என்ற தலைப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். காந்தி மியூசியம் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசும்போது, ‘‘காந்தியடிகள் குறித்து இன்றும் நாம் பேசுகிறோம் என்றால், அதற்கு அவருடைய தலைமை பண்பு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதிகாரம், ஆணவம், ஆதிக்கம் ஆகியவற்றுக்கு மாறாக, நேர்மறை எண்ணங்கள் அடிப்படையில் தலைமை பண்பை கட்டமைத்து காந்தியடிகள் சாதனை படைத்தார்’’ என்றார். இந்நிகழ்வில் பேராசிரியர் பிரவின்குமார் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார். இதில் உடற்கல்வி து றை மாணவர்கள், காந்திய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
The post காந்தியடிகளின் தலைமை பண்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.
