×

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

சென்னை: சென்னை  ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளது. இங்கு, நேற்று 3  தொலைபேசி அழைப்புகளில் பேசிய மர்ம நபர் ஒருவர், முதல்வர் வீட்டில் குண்டு வெடிக்கும்  என மிரட்டல் விடுத்துவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். சென்னை மாநகர போலீசாருக்கு,  இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. உடனே,  முதல்வரின் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், நீண்ட நேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, இது வெறும் புரளி  என தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  நபர் திருப்போரூர் அடுத்துள்ள சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (37)  என தெரிய வந்தது. இதுபற்றி சென்னை போலீசார், திருப்போரூர் போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சிறுதாவூர் அருகே உள்ள பொருந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த  கோவிந்தன் என்பவரின் மகன் அய்யப்பனை  கைது செய்து, சென்னை போலீசாரிடம்  ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….

The post முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Woliber ,Chennai ,Chief President ,Anavarpattu ,G.K. Stalin ,House of Principals ,Wolfer ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு