- திருவாரூர்
- தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கம்
- அனைத்து இந்தியாவும்
- பொதுச்செயலர்
- அரசு ஊழியர் சங்கம்…
- தின மலர்
திருவாரூர், ஆக. 3: பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கிட வேண்டும் என தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட கூட்டம் திருவாரூரில் அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய பொது செயலாளர் கு.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், நியாயவிலை கடைகளில் குடும்பஅட்டைதாரர்களின் கைரேகை 90 சதவிகித அளவில் பதிந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவினால் கிராமபுறங்களில் தொழிலாளர்களின் கைரேகை பதிவு சரிவர இல்லாமல் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்படுவதை கருத்தில்கொண்டு பழைய நடைமுறைபடி 40 சதவிகித அளவில் கைரேகை பதிவினை கொண்டு பொருட்கள் வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும்.
The post பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை வேண்டும் appeared first on Dinakaran.
