×

பவானிசாகர் அணையில் பரிசல் கவிழ்ந்து 2 பேர் பலி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. கோடேபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (18), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38), சத்தியமங்கலம் கரட்டூர் பகுதியை சேர்ந்த சக்தி ஆகிய 3 பேரும் நேற்று காலை பரிசலில் சென்று பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள ஒத்தப்பனை மரக்காடு என்ற இடத்தில் நீரில் மூழ்கிய வாழைத்தார்களை வெட்டி பரிசலில் ஏற்றிக்கொண்டு வால்கரடு நோக்கி சென்றனர்.

அப்போது, அதிவேகமாக காற்று வீசியதால் பாரம் தங்காமல் பரிசல் நீரில் கவிழ்ந்தது. இதில் வாழைத்தாருடன் 3 பேரும் மூழ்கினர். இதில் சக்தி நீச்சலடித்து கரை சேர்ந்தார். மணிகண்டன், சுரேஷ் இருவரும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியாகினர். இதில், சுரேஷின் உடல் மீட்கப்பட்டது. மணிகண்டனின் உடலை தேடி வருகின்றனர்.

The post பவானிசாகர் அணையில் பரிசல் கவிழ்ந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Sathyamangalam ,Erode district ,Manikandan ,Kodepalayam ,Suresh ,Vadavalli ,Shakti ,Satyamangalam ,Karatur ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...