- சந்திரசேகர
- தெலுங்கானா
- அமலாக்கத் துறை
- திருமலா
- ரேவந்த் ரெட்டி
- காங்கேயம் ஊராட்சி
- கல்யாண்குமார்
- சந்திரசேகர ராவ் அரசு
- சந்திரசேகர ராவ்
- தின மலர்
திருமலை: தெலங்கானாவில் ரேவந்த்ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சந்திரசேகரராவ் அரசின்போது கால்நடைத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய கல்யாண்குமார், கால்நடை பராமரிப்புதுறை அலுவலகத்திற்கு சென்று பதிவுகளை அழித்து, சில கோப்புகளை எரித்து, பீரோவின் பூட்டுகளை உடைத்து ஆதாரங்களை அழித்ததாக ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆடு விநியோக திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அளித்த அறிக்கையின் அடிப்படையில் கரீம்நகர், மகபூப்நகர், நல்கொண்டா, நிஜாமாபாத், வாரங்கல், அடிலாபாத் மற்றும் சங்கரெட்டி ஆகிய 7 மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் செம்மறி ஆடு விநியோக திட்டத்தில் நடந்த முறைகேடு காரணமாக அரசுக்கு சுமார் ரூ.254 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் போலி வியாபாரிகளுக்கு ஏராளமான அரசு நிதி சென்றுள்ளது.
அதன்படி மொத்தம் 32 மாவட்டங்களில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என தெரிகிறது. ஐதராபாத்தில் நடத்திய சோதனைகளில் 200 போலி வங்கிக்கணக்கு புத்தகங்கள், வெற்று காசோலைகள், டெபிட் கார்டுகள், 31 மொபைல் போன்கள், 20க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தெலங்கானாவில் சந்திரசேகரராவ் ஆட்சியில் செம்மறி ஆடு விநியோக திட்டத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது: அமலாக்கத்துறை அறிக்கை appeared first on Dinakaran.
