×

விபி ஜி ராம் ஜி மசோதா குறித்து விவாதம் 30ம் தேதி பஞ்சாப் சிறப்பு சட்டமன்றக் கூட்டம்

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் பக்வந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விபி ஜி ராம் ஜி மசோதா குறித்து விவாதிப்பதற்காக வருகிற 30ம் தேதி பஞ்சாப் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறுகையில்,‘‘ விபி ஜி ராம் ஜி மசோதாவின் கீழ் கொண்டுவரப்படும் திருத்தங்களுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. பஞ்சாப் அல்லது நாட்டில் உள்ள ஏழைகளின் உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படும் என்பது குறித்து விவாதிப்பதற்காக பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்பு அமர்வு வருகிற 30ம் தேதி கூட்டப்படும்” என்றார்.

Tags : Punjab Assembly ,Chandigarh ,Punjab ,Chief Minister ,Bhagwant Mann ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...