×

கேரள கன்னியாஸ்திரிகளுக்கு சட்டீஸ்கர் நீதிமன்றம் ஜாமீன்

துர்க்: கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகியோர் சட்டீஸ்கரின் நாராயன்பூரை சேர்ந்த 3 பெண்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றியதாகவும் அவர்களை கடத்தியதாகவும் உள்ளூர் பஜ்ரங் தள நிர்வாகி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி துர்க் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே போலீசார் 2 கன்னியாஸ்திரிகள் உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில், பிலாஸ்பூரில் உள்ள என்ஐஏ முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சிராஜூதின் குரேஷி, 2 கன்னியாஸ்திரிகள் உட்பட 3 பேருக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் இருவரும் துர்க் மத்தியில் சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.

The post கேரள கன்னியாஸ்திரிகளுக்கு சட்டீஸ்கர் நீதிமன்றம் ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh court ,Preethi Mary ,Vandana Francis ,Kerala ,Bajrang Dal ,Narayanpur, Chhattisgarh… ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...