×

ஒரே மாதத்தில் 2வது முறை அமெரிக்காவில் காந்தி சிலையை தாக்கி சேதம்

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் சதுக்கத்தில் 8 அடி உயரமுள்ள காந்தியின் வெண்கல உள்ளது. காந்தியின் 117வது பிறந்தநாளை  முன்னிட்டு கடந்த 1986ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி இந்த சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில், இந்த சிலையை நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத விஷமிகள் சேதப்படுத்தி உள்ளனர். இதற்கு, நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மகாத்மா காந்தியின் சிலை 2வது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 6 அடி உயரமுள்ள காந்தியின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த 2 சம்பவங்களிலும் காந்தியின் முகம் சேதப்பட்டு இருக்கிறது. இதனால், ஒரே கும்பல் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது….

The post ஒரே மாதத்தில் 2வது முறை அமெரிக்காவில் காந்தி சிலையை தாக்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,America ,New York ,Manhattan Square, USA ,
× RELATED பரபரப்பாக தேர்தல் முடிவுகள்...