×

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது.

‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக. இவ்வாறு தெரிவித்தார்.

The post 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : KAMALHASAN ,NATIONAL FILM ,Chennai ,Kamal Hassan ,National Film Awards 2023 ,National Film Awards for 2023 ,Kamalhassan ,National Film Awards ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்