×

அறநிலையத்துறை செயல்பாட்டில் குறையில்லை திமுக ஆட்சியில் ஏராளமான கோயில்களில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பெருமிதம்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க தகடு பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று வருகை தந்து அஷ்டாங்க விமானத்திற்கான தங்க தகடை ஒட்டினார்.

பின்பு செய்தியாளர்களிடம், ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், ‘‘இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் என்னை பொருத்தவரை குறை ஒன்றும் தெரியவில்லை. நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. இது கலியுகம் என்பதால் கடவுள் எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை. கோயில்கள் அறநிலையத்துறை கையில் இருக்க வேண்டுமா அல்லது வெளியில் போக வேண்டுமா என்பது கடவுளின் இஷ்டம்’’ என்றார்.

அப்போது நிருபர்கள், ‘‘கோயில்களை தனியார் வசம் கொடுக்கலாமா’’ என கேட்டபோது, ‘‘நாம் ஒற்றுமையாக இருந்தால் தகராறு வராது. அரசும் கோயில் விவகாரத்தில் தலையிடாது. நாம் தகராறு செய்வதால் கோயில்களை அரசு எடுக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. அறநிலையத்துறையை கையில் எடுத்துக் கொண்டு இத்தனை கும்பாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நாம் சந்தோஷப்பட வேண்டும்’’ என்றார்.

The post அறநிலையத்துறை செயல்பாட்டில் குறையில்லை திமுக ஆட்சியில் ஏராளமான கோயில்களில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Srivilliputhur ,Tiruputtur ,Ashtanga Vimana ,Thirukkoshtiyur ,Sri Soumya Narayana Perumal Temple ,Sivaganga district ,Srivilliputhur Andal Temple Math ,Sri Sadagopa Ramanuja jeeyaar ,Kumbabhishekam ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...