×

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்து அங்கேயே வைத்திருப்பதால் தொடர்ந்து கொண்டு வரப்படும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத அளவிற்கு இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே, நெல்மூட்டைகளை அவ்வப்போது கொள்முதல் செய்து அங்கிருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

பல நெல்கொள்முதல் நிலையங்களில் சாக்கு பைகள், தார் பாய்கள் தேவையான அளவிற்கு இருப்பில் இல்லாமல் இருப்பதும் முறையற்றது. எனவே, தமிழக அரசு, போதிய இட வசதியுடன் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளதை, சாக்கு பைகள், தார் பாய்கள் தேவையான அளவிற்கு இருப்பில் இருப்பதை, உடனுக்குடன் கொள்முதல் செய்வதை தொடர் நடவடிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : G.K. Vasan ,Chennai ,Tamil Nadu Congress ,President ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...