திருமலை: தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு சிலர் அநாகரீகமான செயல்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை (ரீல்ஸ்களை) படம்பிடித்து சமீப காலமாக சமூக ஊடகங்களில் பதிவேற்று வருகின்றனர் என்று தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. திருமலை போன்ற புனிதமான ஆன்மீக இடத்தில் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய மற்றும் அநாகரீகமான செயல்கள் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற வீடியோக்களை படம்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான விஜிலென்ஸ் எச்சரித்துள்ளது. திருமலையின் புனிதத்தை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திருமலையில் ஆபாசமான அநாகரீகமாக வீடியோக்கள் மற்றும் ஆபாச செயல்களின் ரீல்ஸ்களை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
The post திருமலையில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை: தேவஸ்தானம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
