ஈரோடு, ஜூலை 31: ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சின்ன மாரியம்மன் கோவில் வீதியில் சரவணன் மகன் நந்தகுமார் (24) என்பவர், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நந்தகுமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 20 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், கருங்கல்பாளையம் சக்திவேல் மகன் மதன மாணிக்கம் (19) என்பவரை கைது செய்து, 4 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
The post போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.
