மரக்காணம், ஜூலை 31: மரக்காணம் அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அனுமந்தை டோல்கேட் அருகில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து பைக்கில் ஒருவர் வேகமாக வந்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது புதுவை மாநிலத்தை சேர்ந்த மதுபாட்டில்கள் 100 அவரிடம் இருந்துள்ளது. இந்த மதுபாட்டில்களை கைப்பற்றி அவரை மரக்காணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர் மரக்காணம் அருகே கூமுட்டி சாவடி மீனவர் பகுதியை சேர்ந்த விஸ்வ கேது (42) என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்குடன் கைது செய்தனர்.
The post பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.
