×

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

ஓசூர், ஜூலை 31: ஓசூர் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்று பார்வையிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி குடிசெட்லு திம்மராயசுவாமி கோயில் வளாகத்தில் தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, அலசப்பள்ளி – பட்வரப்பள்ளி, பாலிகானப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது. இதில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, பல்வேறு அரசு துறைகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய பொறுப்பாளர் லோகேஷ்ரெட்டி, நிர்வாகிகள் ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆனந்தப்பா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் முனிராஜ், வெங்கடப்பா, பஷீர், முன்னாள் கவுன்சிலர் சொக்நாத்ராஜ், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Hosur ,Prakash MLA ,Krishnagiri district ,Hosur assembly constituency ,Kudisethlu Thimmarayaswamy temple complex ,Thummanapalli ,Padudepalli ,Alasapalli - Padvarapalli ,Balikanapalli panchayats… ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு