- காவேரிப்பட்டணம்
- வஹவச்சனூர் வேளாண்மைக் கல்லூரி
- கலெக்டர் அலுவலகம்
- கிருஷ்ணகிரி
- மாவட்டம்
- பையூர் ரிசர்ச் செண்டர்
காவேரிப்பட்டணம், டிச.22: வாழவச்சனூர் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 26 மாணவர்கள், பையூர் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் பல்வேறு குறைகளை மாவட்ட கலெக்டரிடம் முன்வைத்தனர். அவற்றை கேட்டுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வில், ராவே திட்ட மாணவர்களின் பங்கேற்பை பேராசிரியர் கிருஷ்ணவேணி ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு நிர்வாக அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் நிலைமைகளை நேரடியாக அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.
