×

செல்போன் பறித்த 4 பேர் கைது வேலூரில்

வேலூர், ஜூலை 31: வேலூர் விருதம்பட்டை சேர்ந்தவர் பாஸ்கர்(40). இவர் நேற்று வேலூர் பாலாற்றங்கரை சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்த 4 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில், வேலூர் வடக்கு போலீசார், வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு செல்போனை பறித்து சென்ற வேலூர் வசந்தபுரம் ரஞ்சித்(29), முத்துமண்டபம் பகுதி கருப்பு(எ )தினேஷ்(26), சீனிவாசன்(19), வெங்கடேசன்(எ) நைனா(18) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட 4 செல்போன்களை கைப்பற்றினர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செல்போன் பறித்த 4 பேர் கைது வேலூரில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Bhaskar ,Vridhampatti, Vellore ,Palatrangarai crematorium ,
× RELATED சென்டர்மீடியன் மீது கார் மோதி சேலம்...