×

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கியதால் துறைமுகம் மூடல்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாயை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, ஈகுவாடர், பெரு, பிரெஞ்சு பாலினேசியா, குவாம், கோஸ்டாரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் துறைமுகம் மூடப்பட்டது. சுனாமி தாக்கியதை அடுத்து ஹவாய் தீவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவாய் தீவை தொடர்ந்ட்ஹு அலாஸ்கா தீவிலும் சுனாமி தாக்கியுள்ளது. ரஷ்யாவில் நிலநடுக்கம், சுனாமியால் மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

The post ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கியதால் துறைமுகம் மூடல் appeared first on Dinakaran.

Tags : island of Hawaii ,Russia ,Kamchatka Peninsula ,Japan ,Alaska ,Hawaii ,CHINA, JAPAN ,THE UNITED STATES ,THE PHILIPPINES ,CHILE ,ECUADOR ,Dinakaran ,
× RELATED ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில்...