×

கதைக்கு தேவை என்பதால்தான் அவ்வாறு நடித்தேன்: தமன்னா கொடுத்த அதிர்ச்சி

கடந்த 18 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நீடிக்கும் தமன்னா, திரைப்படங்களை விட வெப்தொடரில் படுகவர்ச்சியாக நடித்துள்ள போட்டோக்களும், வீடியோக்களும் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் நடித்துள்ள ‘ஜீ கர்தா’ என்ற வெப்சீரிஸ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 2016ல் அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், ‘எந்தப் படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், வெப்தொடரில் லிப்லாக் மட்டுமின்றி, நெருக்கமான படுக்கையறைக் காட்சியிலும் நடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கதைக்கு தேவை என்பதால்தான் அவ்வாறு நடித்தேன். அதில் ஆபாசம் இல்லை. மேலும், கதைக்கு தேவையாக இருந்ததால் முத்தக்காட்சியில் நடித்தேன். ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்கவில்லை’ என்றார். மேலும் அவர் கூறும்போது, ‘சினிமாவில் 18 வருடங்களுக்குப் பிறகு பிரபலமாக மாறுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. இந்திய சினிமாவில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. அவை என்னை தடுத்து நிறுத்துவதை நான் விரும்பவில்லை’ என்றார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப்தொடரிலும் தமன்னா படுகவர்ச்சியாக நடித்துள்ளார். இதில் அவர் தனது காதலரும், பாலிவுட் நடிகருமான விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

The post கதைக்கு தேவை என்பதால்தான் அவ்வாறு நடித்தேன்: தமன்னா கொடுத்த அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamannaah ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்