×

ராகுல் 2வது அம்பேத்கர்: காங். தலைவரின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலீத் தலைவரும் முன்னாள் எம்பியுமான உதித் ராஜ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘வரலாறு மீண்டும் மீண்டும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை வழங்காது என்று பிற்படுத்தப்பட்டோர் நினைக்க வேண்டியிருக்கும். தல்கடோரா ஸ்டேடியம் மாநாட்டில் ராகுல்காந்தி கூறியதை அவர்கள் பின்பற்றி ஆதரிக்க வேண்டும்.

அவர்கள் அவ்வாறு செய்தால் அப்போது ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டாவது அம்பேத்கராக நிரூபிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் உதித் ராஜின் இந்த கருத்துக்களை பாஜ கேலி செய்துள்ளது. இது தலித்துக்கள் மற்றும் அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் சமூக சீர்திருத்தவாதியை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளது.

The post ராகுல் 2வது அம்பேத்கர்: காங். தலைவரின் கருத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Rahul 2nd Ambedkar ,New Delhi ,Dalit ,Congress ,Udit Raj ,Rahul Gandhi ,Talkatora ,Stadium ,Dinakaran ,
× RELATED 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!