×

திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டிற்கான முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.ஆசிரியர்கள் முகமது ரஃபீக், எழிலரசி, அஜிதாராணி, ஆடின் மெடோனா முன்னிலை வகித்தனர்.

பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் நடைமுறைகள் தீர்மானங்களை பற்றி இடைநிலை ஆசிரியை உமா மகேஸ்வரி விளக்கி கூறும்போது தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுத்தலின்படி இந்த ஆண்டிற்கான முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது.

பள்ளி மேலாண்மை குழு மாணவர்களின் வளர்ச்சிக்கும் பள்ளியின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் வகையில் மாதம் தோறும் நடத்தப்படும். பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் உயர்கல்வி பெற உரிய முறையில் வழி காட்டுவது.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தமிழக பள்ளிக்கல்வி துறையின் மணற்கேணி செயலியின் பயன்பாடு குறித்தும் விரிவாக விளக்கி கூறினார்.

பள்ளி மேலாண்மை குழுத் தலைவி ரேவதி பேசும் போது, மாணவர்கள் கற்றலில் முன்னேற்றத்தை அடைய காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அலகுத் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்களை பட்டியலிட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் மாணவர்களின் முன்னேற்றங்கள் பற்றிய நிலையை பெற்றோர்கள் அறிந்து கொள்வார்கள் என்றார்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர்கள் பாக்யராஜ் பாஸ்கரன் முத்துராமன் சிவராமன் ஆகியோர் செய்து இருந்தனர். மேல்நிலை தொழிற்கல்விஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி உரை ஆற்றினார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Management Committee Meeting ,Thiruthurapundi ,State School ,Driturapundi ,Government Men ,Secondary ,School ,Balamurugan ,Mohammad Rafiq ,Ehlarasi ,Azitharani ,Adin Medona ,School Management Committee ,Reduthurapundi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...