×

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வாங்கப்பட்ட பர்கரில் நெளிந்த புழுக்கள்: வாடிக்கையாளர் அதிர்ச்சி


சென்னை: சென்னையை அடுத்த பருத்திப்பட்டியலில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வாங்கப்பட்ட பர்கரில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். ஐயப்பாக்கம் பகுதியை சேர்ந்த லலிதா என்பவர் தனது இரண்டு மகள்களுடன் பர்கர் வாயில் சாப்பிட்டு உள்ளார் பாதி சாப்பிட்ட நிலையில் பர்கரில் புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அவர் உணவாக ஊழியரிடம் கேட்ட போது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதை அடுத்து புகாரில் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்த போது பர்கரில் புழுக்கள் இருந்ததை உணவாக பொறுப்பாளர் ஒத்துக்கொண்டு உள்ளார் பிறகு புழுக்கள் இருந்த பர்கர் சாப்பிட்ட இரண்டு சிறுமிகளையும் மருத்துவமனைக்கு அளித்த செல்ல காவல் துறையினர் அறிவுடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் திருவள்ளுர் மாவட்டம் உணவாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

The post மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வாங்கப்பட்ட பர்கரில் நெளிந்த புழுக்கள்: வாடிக்கையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : McDonald's ,Chennai ,Cottonwood ,Lalita ,Skepakkam ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு