×

கூட்டணியில் இல்லையா? எடப்பாடியின் அறியாமை: டிடிவி. பதிலடி

சிவகங்கை: சிவகங்கையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி: 2024ல் தே.ஜ. கூட்டணியில் சேர்ந்தோம். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என ஆதரித்தோம். இப்போது இக்கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளன. 2021 சட்டமன்ற தேர்தலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய கூட்டணியில் பல்வேறு கட்சிகளை சேர்க்க முயற்சி செய்தார். அப்போது அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இப்போது மீண்டும் அமித்ஷா, ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நான் கருத்துக்கூற மாட்டேன். இந்த கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என சிலர் சொல்வது அவர்களது அறியாமையை (எடப்பாடி) காட்டுகிறது. அவர்களுக்கு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் சொல்லியிருக்கிறார். தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை.இவ்வாறு தெரிவித்தார்.

The post கூட்டணியில் இல்லையா? எடப்பாடியின் அறியாமை: டிடிவி. பதிலடி appeared first on Dinakaran.

Tags : Edapadi ,DTV ,SIVAGANGA ,AMUKA ,GENERAL SECRETARY ,SIVANGKA ,Dhinakaran ,J. ,Modi ,2021 Assembly Elections ,Dinakaran ,
× RELATED எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி...