×

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: தமிழ்நாட்டில் நிலம் தேவை; ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதில்

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள 217 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மக்களவையில் புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிலளித்துள்ளார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்காக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் விரிவான திட்டம் தயாரித்துள்ளது. ஏர்பஸ் A-320 உள்பட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: தமிழ்நாட்டில் நிலம் தேவை; ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதில் appeared first on Dinakaran.

Tags : Puducherry Airport ,Tamil Nadu ,Union Minister ,Ram Mohan Naidu ,Puducherry ,M. ,Vaithilingam ,Indian Airlines ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்