மானாமதுரை, ஜூலை 25: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் திருவிழா வரும் 28ம் தேதி காலை 9.35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்திரை திருவிழாவை போல ஆடித்திருவிழாவும் பத்து நாட்கள் நடைபெறும்.
விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு ஆக.6ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
The post மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

